நடிப்பதை விட இயக்குவது பெருமையாக இருந்தது

i3 4 5
i3 4 5

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகனான சாந்தனு, 10 ஆண்டுகளாக சினிமாவில் ஜெயிக்க போராடி வருகிறார். தற்போது மாஸ்டர் படம் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் தனியாக யுடியூப் சேனல் தொடங்கி அதில் “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” என்ற குறும்படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டு இருந்தார். இதில் அவரது மனைவி கீர்த்தியும் நடித்திருந்தார். இந்த குறும்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக பத்திரிக்கை மற்று ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சாந்தனு.

அதில், “கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய V.I.P.க்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள் மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.

பாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறதவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றது தான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுதுமுன்னு தோணுச்சு. கன்னி முயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, டேட்சன் பிக்சர்ஸ் என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்” அப்பிடிங்ற டைட்டிலோட மே 16 அன்று எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) சிறு பயத்துடன் வெளியிட்டேன். இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக் கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.