பவன் கல்யாண் படத்தில் ஜான்வி கபூர்

i3 15
i3 15

ஹிந்தி ‘பின்க்’, தமிழ் ‘நேர்கொண்ட பார்வை’, தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ ஆக ரீமேக் ஆகி வருகிறது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட திரைக்கதையைத்தான் தெலுங்கிற்கும் பயன்படுத்துவதாகத் தகவல்.

தமிழில் அஜித் மனைவியாக ஹிந்தி நடிகையான வித்யா பாலன் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தெலுங்கில் அந்தக் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கப் போகிறார், அவர் நடிக்கப் போகிறார் என பல நடிகைகளின் பெயர்களைச் சொல்லிவிட்டார்கள்.

அந்த வரிசையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவும் வழக்கம் போல் தகவலாகப் போகுமா அல்லது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.