சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா ?

i3 4 7
i3 4 7

கொரோனா ஊரடங்கின் ஐந்தாவது கட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள், டிவி தொடர் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன.

டிவி தொடர் படப்பிடிப்புகளுக்கு மட்டும் 20 பேர் மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தலாம் என தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 60 பேர் வரை வைத்து படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று தற்போது டிவி தொடர்களுக்கு 60 பேர் வரை வைத்து படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், பல டிவி தொடர்கள் நாளை முதல் தங்களது படப்பிடிப்புகளை நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதனிடையே, டிவி தொடர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதைப் போல சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டுமென திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

டிவி தொடர் படப்பிடிப்புகளை 60 பேர் வரை வைத்து நடத்துவதற்கு சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சினிமா படப்பிடிப்பு நடத்த 60 பேர் போதாது 100 பேராவது வேண்டும். மேலும், படப்பிடிப்புகளில் அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை அவர்கள் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதையும் சுகாதாரத் துறையினர் கவனிக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவருமே இப்படி கூட்டத்தை அதிகரித்துக் கொண்டு போனால் ‘கொரானோ’ தொற்று எப்படி பரவாமல் தடுக்க முடியும் என்ற அச்சமும் பலருக்கு எழுகிறது.