மின்சார வாரியம் மீது பிரசன்னா குற்றச்சாட்டு

i3 14
i3 14

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்தாவது ஊரடங்கில்தான் சில தளர்வுகளை அறிவித்து இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பமாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை அளவீடு செய்யவில்லை. மாறாக அதற்கு முந்தைய கட்டணத்தையே கட்டச் சொன்னார்கள்.

தற்போது வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டு அளவீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், அதில் குளறுபடிகள் இருப்பதாக மக்களிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முந்தைய கட்டணத்தைக் கட்டியவர்களுக்குக் கூட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்று மின்சார வாரியம் மீது குறை தெரிவிக்கிறார்கள்.

அது பற்றி நடிகர் பிரசன்னா ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், “இந்த கொவிட் லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.