ஐஸ்வர்யா ராயின் இசைஞானம் : ஷோபனா கருத்து

i3 15
i3 15

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்-ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் முடியப்போகிறது. ராமாயணத்தை மையப்படுத்தி இது உருவாக்கி இருந்தது. இந்தநிலையில் நடிகை ஷோபனா தானும் ஐஸ்வர்யா ராயும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது தாயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராவணன் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் கூட, இந்தப்படத்தில் ஷோபனா ஒரு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐஸ்வர்யா ராய் குறித்து ஷோபனாவிடம் கேட்கப்பட்டபோது, “ஐஸ்வர்யா ஒரு இசையமைப்பாளரை போல இசையின் நுணுக்கங்களை உள்வாங்கி கொள்கிறார். இது ஒரு டான்ஸ் மாஸ்டராக என்னை போன்றவர்களை ஊக்கப்படுத்துகிறது” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.