கமலுடன் கைகோர்க்கும் கஸ்தூரி

i3 22 1
i3 22 1

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் நாமே தீர்வு என்ற புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்.

இதற்கான வீடியோவை நேற்று வெளியிட்ட கமல், இது அரசை விமர்சனம் செய்வதற்கான நேரம் இல்லை. வாருங்கள் ஒன்றாக இணைந்து கொரோனாவை வெற்றி கொள்வோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “இதுக்கு முன்னாடி கால் பண்ண சொன்ன கட்சி, காவேரி மாதிரியில்லாம, உருப்படியான விஷயமா இருக்கும்னு எதிர்பாக்குறேன், நம்புறேன், இணையுறேன். என் சென்னைக்காக. பார்ப்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சில சமயங்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை விமர்சித்து இருக்கிறார் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.