ஜெயம் ரவியின் திரைப்படத்தில் சாய்பல்லவி : வைரலாகும் ஒளிப்படம்!

saipallavi 962220m
saipallavi 962220m

நடிகர் ஜெயம் ரவியில் திரைப்படத்தில் சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஒளிப்படம்  இணையத்தில் வைரலாகிவருகின்றது.

மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவி  தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பிரேமம் படம் மூலம் தான் சாய் பல்லவி நடிகையாக அறிமுகமானதாக கூறப்படும் நிலையில்  அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போதே ஜெயம் ரவியின் “தாம்தூம்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அந்த படத்தில் கங்கனா ரனாவத்துடன் அவர் இருக்கும் ஒளிப்படங்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.