திருமணமா இல்லை என்கிறார் ஹன்சிகா

i3 14 2
i3 14 2

தமிழ்த் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பிஸியான கதாநாயகியாக இருந்தவர் ஹன்சிகா. தற்போது தமிழில் ‘மஹா’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இதனிடையே, தொழிலதிபர் ஒருவரை ஹன்சிகா மணக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அது பற்றி டுவிட்டரில் அவரை டேக் செய்து பதிவிட்டதற்கு ‘ஓ மை காட், யார் அது ?,’ என பொய்யான அதிர்ச்சியாகக் கேட்டு ‘ரப்பிஷ்’ எனக் கமெண்ட் செய்துள்ளார் ஹன்சிகா.

மேலும், அவரது நண்பர்கள் ஒருவர், “ஏன் இது பற்றி நீங்கள் என்னிடம் சொல்லவில்லை’ என்று கேட்டதற்கு, “எனக்கே இப்போதுதான் தெரியும்,” என ஹன்சிகா பதிலளித்துள்ளார்.

ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் இப்படி அடிக்கடி செய்திகள் வருவதும், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிப்பதும் வழக்கமான ஒன்றுதான். பொதுவாகக் காதல் என்றுதான் செய்திகள் வரும். ஆனால், பிசினஸ்மேனுடன் கல்யாணம் என்றே செய்தி வெளியிட்டுள்ளார்கள்.