சுனிலுக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்

i3 10 2
i3 10 2

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருப்பதால் பலரும் தங்களது படங்களின் கதைகளை வெளிநாட்டுக்கு உள்நாட்டிலேயே செட் போட்டு எடுக்க முடிவு செய்து வருகிறார்களாம்..

இன்னும் சிலரோ வெளிநாட்டுக்கு. பதிலாக உள்நாடு என ஸ்கிரிப்ட்டிலேயே மாற்றம் செய்கின்றனராம்.

இப்டி இடங்களை மாற்றம் செய்யும் இயக்குனர்கள் மத்தியில் தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு, பாலகிருஷ்ணாவை வைத்து தான் இயக்கவுள்ள படத்தின் ஸ்க்ரிப்ட்டில் மாற்றம் செய்யும்போது, காமெடி நடிகர் சுனிலின் கதாபாத்திரத்தையே படத்திலிருந்து தூக்கிவிட்டாராம்.

அதாவது காமெடியை குறைத்துவிட்டு ஆக்சனுக்கு முக்கியத்துவம் இருக்குமாறு கதையையே மாற்றிவிட்டாராம். இதை அறிந்து அதிர்ச்சியான சுனில் தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டு வருகிறாராம்.