மூத்த ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் காலமானார்

i3 14 3
i3 14 3

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்(69). சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(ஜுன் 13) மதியம் அவரது உயிர் பிரிந்தது.

பாரதிராஜாவின் கண்கள் என்று அறியப்படும் ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன், மறைந்த பழம்பெரும் இயக்குநர் ஏ.பீம்சிங்கின் மூன்றாவது மகனும், பிரபல சினிமா எடிட்டர் மற்றும் இயக்குநர் பீ.லெனினின் இளைய சகோதரரும் ஆவார். 1978ல் தனது தந்தையும், இயக்குநருமான பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” திரைப்படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக வெள்ளித் திரையில் அறிமுகமானார்.

அதன்பின் இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டு வெளிவந்த “கொத்த ஜீவிதலு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் முதன் முதலாக அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய கண்ணன், பின்னர் அவருடைய ஏராளமான படங்களுக்கு அவரின் கண்களாகவே இருந்து பல வெற்றிப் படங்களை இவரது காமிராவால் படம் பிடித்தார்.