நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை

ms movie
ms movie

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் எம்..எஸ்.தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

pavitra rishta என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 2013ம் ஆண்டு வெளிவந்த Kai po che படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் சுஷாந்த். பீகார் தலைநகர்

பாட்னாவில் பிறந்தவரான சுஷாந்த் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட M.S. Dhoni: The Untold Story திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும் கண் முன்னே கொண்டுவந்து அனைவரின் அபிமானத்துக்குரிய நடிகராக உயர்ந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாலிவுட் திரையிலகினர், ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜரான திஷா சலியன் என்ற பெண்மணி தனது வீட்டின் 14வது மாடியிலிருந்து இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரின் மறைவிற்கு நடிகர் சுஷாந்த் அதிர்ச்சி தெரிவித்திருந்த நிலையில் இன்று அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதாகும் சுஷாந்த், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை, நடிகை Rhea Chakraborty-உடன் அவர் காதல் வயப்பட்டிருந்ததாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

நடிகர் சுஷாந்தின் மறைவு குறித்து வீட்டு பணிப்பெண் மூலம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 12 படங்களிலும், 4 தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கும் சுஷாந்த் பிலிம் ஃபேர் உள்ளிட்ட என்னற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக கடைசியாக அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டகிராம் பதிவில் தனது மறைந்த தாயார் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிரபல நடிகர் சயீப் அலி கானுடன் இணைந்து Dil Bechara என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார் சுஷாந்த் ராஜ்புத். இப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் அவரின் மறைவு திரையிலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.