கல்யாணக் கவலையில் இருக்கும் ஷெரின்

i3 17 4
i3 17 4

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஷெரின். தொடர்ந்து விசில், உற்சாகம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்த ஷெரின், அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். அவரது வயதை ஒத்த நடிகைகள் பலர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்ட நிலையில், ஷெரின் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார். இது தான் தற்போது அவருக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் வெளியிட்டுள்ள வீடியோவில், “சிங்கிள் (Single) எனும் வார்த்தையில் இருந்து முதல் எழுத்தை எடுத்துவிட்டு, எனது பெயரின் முதல் எழுத்தை போட்டாலும் சிங்கள் என்று தான் வருகிறது”, என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்த ஷெரின், தனக்கான இளவரசருக்காக காத்திருப்பதாகக் கூறி திருமணத்திற்கு தான் தயார் என்பதை சூசகமாக அறிவித்தார். தற்போது வேடிக்கையாக வீடியோ வெளியிட்டு திருமணம் பற்றிய தனது கவலையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் ஷெரின் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.