மிஷ்கினுடன் சமரச பேச்சா? – விஷால் தரப்பு விளக்கம்

vishal mysskin
vishal mysskin

துப்பறிவாளன் 2-ம் பாகத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், விஷால் தரப்பு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் சில வாரங்கள் நடந்தது. அங்கு விஷால்-மிஷ்கின் இடையே திடீர் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நின்று போனது. படத்துக்கு அதிகம் செலவு வைத்து விட்டதாக மிஷ்கின் மீது விஷால் குற்றம் சாட்டினார். 

படத்தை தொடர்ந்து இயக்க தனக்கு ரூ.5 கோடி சம்பளம் தரவேண்டும் என்பது உள்பட 15 நிபந்தனைகளை மிஷ்கின் விதித்ததாக கடித நகல் வெளியானது. இந்த மோதலையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார்.

விஷால், மிஷ்கின்

இந்த நிலையில் மிஷ்கின்-விஷால் இடையே சமரசம் ஏற்பட்டு உள்ளது என்றும் துப்பறிவாளன் 2-ம் பாகத்தை மிஷ்கினே இயக்க இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. 
இதனை விஷால் தரப்பில் மறுத்துள்ளனர்.

“மிஷ்கினுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பே இல்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் துப்பறிவாளன்-2 படத்துக்கு பலகோடி நஷ்டத்தை மிஷ்கின் ஏற்படுத்தி விட்டார். எனவே மீண்டும் படத்தை இயக்க அவரை அழைக்கும் எண்ணம் இல்லை. சக்ரா படத்தின் 4 நாள் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தை விஷால் இயக்குவார்” என்றனர்.