முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளிய விஜய் தேவரகொண்டா

Vijay devarakonda
Vijay devarakonda

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகர்களை பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களைத்தான் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். 

இன்ஸ்டாகிராம் தளத்தை அதிகமான புகைப்படங்களைப் பகிரும் தளமாகவே பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். சில தனிப்பட்ட புகைப்படங்களையும் அத்தளத்தில்தான் முன்னணி நடிகைகள் அதிகம் பகிர்வார்கள்.

விஜய் தேவரகொண்டா

 தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார்.

தற்போது அவருடைய பாலோயர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகரும் அவ்வளவு பாலோயர்களை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.