பாடல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி

IAS officer impressed many fans with his song
IAS officer impressed many fans with his song

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சினிமாவில் திறமைகளை காண்பித்து வரும் நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாடல் மூலம் கவனம் பெற்றிருக்கிறார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் நுழைந்து பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்.

இவருடைய நடிப்பில் தற்போது ‘தில் தோட் கே’ என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடல் வீடியோ வெளியாகி நான்கு நாட்களில் 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

அபிஷேக் சிங்

ஒரு ஐஏஎஸ் அதிகாரி சிறந்த நடிகராகவும் இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் ஏற்கனவே சார் பந்த்ரா என்ற படத்தின் மூலம் அருமையான நடிப்பு திறனையும், ரொமான்டிக் பக்கத்தையும் வெளிக்காட்டியிருந்தார். அடுத்ததாக இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் டெல்லி கிரைம் 2 என்ற தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.