எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் காரணம் – மீரா மிதுன்

e081b377887435890ef37c3cbe1b5cb6
e081b377887435890ef37c3cbe1b5cb6

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே சில சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் பற்றி கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் எழுந்தன. தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டார்.

சூப்பர் மாடல் என தன்னை பற்றி அடிக்கடி கூறி வரும் மீரா மிதுன் ரஜினி, திரிஷா, தனுஷ், விஜய் பற்றி பேசி சம்மந்தப்பட்ட ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு நடிக்க தெரியாது. ஒரு சாதாரண காட்சிக்கு கூட 20 டேக் எடுப்பார், என கடுமையாக சமீபத்தில் விமர்சித்துள்ளதால் மீரா மிதுன் மீது சூர்யா ரசிகர்கள் கோபத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் காரணம். சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை மிரட்டு கிறார்கள். மோசமான செய்திகள், கற்பழிப்பு, கொலை மிரட்டல்கள் வருகின்றன.

உங்க மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இப்படி நடந்தா ஏத்துப்பீங்களா? எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யா தான் காரணம் என மீரா மிதுன் கூறியுள்ளார்.