இறப்பதற்கு முன் சுஷாந் கடைசியாக செய்தது இதுதான்!

images 5
images 5

கடந்த ஜூன் 14 ல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணம் குறித்து அவரின் காதலி மீது சுஷாந்தின் தந்தை போலிசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுஷாந்தின் காதலியான ரியா மற்றும் அவரின் குடும்பத்தினர் நிதி மோசடி, தற்கொலைக்கு தூண்டுதல், மன ரீதியாக துன்புறுத்தல், நம்பிக்கை துரோகம் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுஷாந்திற்கு சொந்தமான ரூ 1.5 கோடி ரூபாய் அவருக்கு தெரியாமல் வேறொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் சுஷாந்த் கூகுள் தளத்தில் வலியில்லா மரணம், இருதுருவ நோய் என்னும் மனநல குறைபாடு, மனச்சிதைவு ஆகிய வார்த்தைகளை தேடியுள்ளதாக மும்பை காவல் துறை கூறியுள்ளது.