பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை!

priya juneja3 1596422545
priya juneja3 1596422545

இவ்வருடம் தொடங்கிய இரண்டு மாதங்களிலேயே கொரோனா நோய் தொற்றும், அதுகுறித்த அச்சமும் உலகம் முழுக்க பரவி அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியது. தொழில்கள் முடங்கிப்போயின.

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதார பின்னடைவும், வேலை இழப்பும் பெருகி மக்களை வறுமைக்கு தள்ளியது.

இதற்கிடையில் சினிமாவில் சில தற்கொலைகளும் நடந்தேறின. இன்னும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை மரணம் பலராலும் ஏற்கமுடியாததாக இருக்கிறது. சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியா ஜுனேஜா கடந்த யூலை 31 ல் தன் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இத்தனைக்கும் அவருடன் அவரின் பெற்றோர்களும், அவரின் சகோதரிகள் மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். மன அழுத்தமே அவரின் தற்கொலைக்கு காரணம் என சொல்லப்பட்டது உண்மை பின்னணி என்ன என்பது போலிசாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.