மகேஷ்பாபு சவாலுக்கு பதிலளித்த தளபதி விஜய்: ரசிகர்கள் கொண்டாட்டம்

1597152715 0423

மகேஷ்பாபு சவாலுக்கு பதிலளித்த தளபதி விஜய்தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் தளபதி விஜய்க்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் ஒன்றை விடுத்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் அவர்கள் ஏற்று நிறைவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  சற்றுமுன் தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று செடிகளை நட்டு, இதுகுறித்த குறித்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

அவரே மண்வெட்டியால் குழி தோண்டி செடிகளை நட்ட இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன  மேலும் மகேஷ் பாபு தனது நன்றியை தெரிவித்துள்ள தளபதி விஜய் கிரீன் இந்தியா சேலஞ்சை அனைவரும் நிறைவேற்றினால் அனைவருக்கும் நல்லது என்றும், அனைவருக்கும் சுகாதாரமானது என்று குறிப்பிட்டு உள்ளார் தளபதி விஜய்யை அடுத்து ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜூனியர் என்டிஆர் எப்போது இந்த சேலஞ்சை நிறைவேற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்