விக்ரம் நடித்த படத்தை திருடிய ஹாலிவுட் சினிமா

download 14
download 14

நான்கு வருடங்களுக்கு முன்பு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்து வெளியான படம் இறுமுகன்.

இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நயன்தாரா, நித்ய மேனன், ரித்விகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் விக்ரம் நடித்திருந்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இருமுகன் படத்தில் ஒரு மருந்தை எடுத்துக் கொண்ட பின்னர் ஹீரோவின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

அதேபோல் தற்போது ஹாலிவுட்டில் உருவாகியுள்ள பவர் பிராஜக்ட் எனும் படத்திலும் ஒரு மாத்திரையை பயன்படுத்தியவுடன் சூப்பர் ஹீரோவாக மாறி விடுவார் கதாநாயகன்.

இதனால் இந்த படத்தின் கதை இருமுகன் படத்தை போலவே இருக்கிறது, என இப்படத்தின் மீது இருமுகன் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் வழக்குப் போட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.