தனுஷின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்!

553766
553766

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.

இவர் இயக்குனர் செல்வராகவன் மூலம் திரையில் கதாநாயகனாக அறிமுகமானார் .

தனுஷ் தற்போது கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சசிகாந்த் தயாரிப்பில் ஜகமே தந்திரம் படத்தை நடித்து முடித்துள்ளார்.

இப்படம் கொராணா தாக்கம் காரணமாக இன்னும் வெளிவராமல் இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் இதன்பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 90% முடிவடைந்த நிலையில் தனுஷ் நடித்திருக்கும் படம் தான் கர்ணன்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் ஒரு படம், மற்றும் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என இணைந்து இருக்கிறார்.

மேலும் தனுஷின் 50வது படத்தை வெற்றி கூட்டணியாக இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.