பிரபாஸுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்!

image1 9
image1 9

தமிழ் சினிமா முன்னணி நடிகைகளில் தற்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமான கதாநாயகி கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்

இந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடித்து வெளிவந்த பாகுபலி 1 மற்றும் 2 படத்தின் மூலம் திரையுலகில் அதிகளவான ரசிகர்களை கொண்டுருப்பவர்.

மேலும் இவர் கூடிய விரைவில் நடிக்க இருக்கும் படம் அதிப்பூர்ஷ். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் பிரபாஸ் ராமன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகி சீதா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தின் கதாநாயகி யார் என்று கூடிய விரைவில் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.