ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாகும் நடிகை வாணி போஜன்

large DktrRVUVAAASLgt Copy 810x400 20737
large DktrRVUVAAASLgt Copy 810x400 20737

‘தாழ் திறவா’ எனும் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பர்மன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பரணி சேகரன் இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகை வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அறிமுக படத்திலேயே அவருக்கு நடிப்புக்கான பாராட்டுகள் கிடைத்தன.

இதனால் பட வாய்ப்புகளும் குவிந்தன. தற்போது விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், சூர்யா தயாரிக்கும் 2 படங்களையும் கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.