தல அஜித்துக்கு தம்பியாக ராஜ் அய்யப்பா!

t7ua8ev8 raj iyappa 640x480 05 June 19
t7ua8ev8 raj iyappa 640x480 05 June 19

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரானா காரணமாக தள்ளிப்போய்வுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது சினிமா படப்பிடிப்புகள் துவங்கலாம் என அரசு உத்தரவின் கீழ் கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் தம்பியா பிரபலம் ராஜ் அய்யப்பா என்பவர் நடிக்க இருக்கிறாராம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.