அத்தையாக நடிக்க சம்மதித்த சிம்ரன்!

large simran hit movies 23888
large simran hit movies 23888

திரையுலகில் ஒரு கதாநாயகனுக்கு 60 வயதிற்கு மேல் ஆனாலும் அவர் கதாநாயகனாக நடித்து வரலாம்.

ஆனால் அதே சமயத்தில் அவர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து பின் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்கள் தான் கிடைக்கிறது.

அந்த வகையில் 90களில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை சிம்ரன்.

சமீபத்தில் கூட சென்ற வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இவருக்கு ஏற்றார் போல் கதைக்களம் கொண்ட படங்கள் எதுவும் தற்போது வரை அமையவில்லை.

இந்நிலையில் தெலுங்கில் அறிமுக நாயகனான ஆகாஷ்பூரி நடிக்க இருக்கும் ரொமான்டிக் எனும் படத்தில் கதாநாயகனுக்கு அத்தையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சிம்ரன்.

நடிகர் ஆகாஷ்பூரி பிரபல தெலுங்கு இயக்குனர் பூரிஜெகநாத் மகன் என்பதும், இந்த படத்தில்தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.