பாதி சம்பளமும் தந்தால் படப்பிடிப்பில் நான் கலந்து கொள்வேன்-விக்ரம்

vikram 1
vikram 1

தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குனர் கௌதம் மேனன்.

இவர் இயக்கத்தில் தற்போது ஜோஷ்வா, இமைபோல் காக்க, மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் சில ஆண்டுகளாக மிக பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் படம் விக்ரமின் துருவ நட்சத்திரம்.

ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு இன்னும் முடிவடையாமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இப்படத்தில் மீதம் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புகள் உள்ளதாம், ஆனால் நடிகர் விக்ரமிற்கு சம்பளத்தில் 3 கோடி இதுவரை தரவில்லையாம்.

அதனை தந்தால் நான் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன், இல்லை என்றால் மீதம் உள்ள காட்சிகளை நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என விக்ரம் கூறியதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் அதிரடி முடிவெடுத்த இயக்குனர் கௌதம் மேனன் படத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறாராம்.