மாஸ்டர் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்!

919228 vijay fan die by suicide rip bala 1
919228 vijay fan die by suicide rip bala 1

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ஏப்ரல் 9ம் திகதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக படம் வெளியாவதற்கு தாமதமாகின்றது.

இப்போது நேரம் இருந்ததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் சில திருத்தங்களை செய்திருக்கிறார்.

அண்மையில் படத்தை படக்குழுவினருக்கு திரையிடப்பட்டிருக்கிறது.

அப்போது காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்த விஜய், இயக்குனரிடம் உண்மையில் இது நான் தானா என வியப்போடு கேட்டுள்ளார். விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.

இப்படத்தில் லோகேஷின் வேலை பிடித்து போக விஜய் தனக்காக இன்னொரு கதையை எழுத கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.