நடிகர் சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வேடிக்கையாக மகன் மற்றும் மகள் செய்த சர்ப்ரைஸ்

1 12

தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவினால் வருமானம் இழந்து பதிப்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகள் வழங்கினார்.

இந்நிலையில் நேற்று தனது இன்று தனது 43வது பிறந்தநாள் கொண்டாடிய சூரிக்கு இயக்குனர் பாண்டிராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூரியின் பிறந்தநாளை அவரது மகன் மற்றும் மகள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கேக் செலவு – 1500, பெட்ரோல் கேக் – 500, டெக்கரேஷன் செலவு – 2000 மொத்தம் 4000 என்றும் மொத்த காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு என்று அந்த கேக்கின் மேல் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளனர்.

தனது பிள்ளைகளின் இந்த குறும்பு தனமான செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.