தாய் மகனை பார்த்துக் கொள்வது போல் வனிதா என்னை பார்த்துக் கொண்டார்-பீட்டர்

1111
1111

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் வனிதா. அதன்பிறகு ஒரு தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பிறகு தனது திருமணம் மூலம் மக்களிடம் சர்ச்சையாக பேசப்பட்டார். அவர் தனது மகள்களின் சம்மதத்துடன் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் வனிதாவின் கணவர் பீட்டருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் வருத்தப்பட்ட வனிதா தனது கணவருக்காக மனம் உருகி டுவிட்டரில் ஒரு பதிவு போட்டார். தற்போது குணமாகி வீட்டில் ஓய்வு எடுக்கும் பீட்டல் பால் வனிதாவிற்காக வருத்தப்பட்டு ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.

இரண்டு நாட்களாக ஒரு தாய் மகனை பார்த்துக் கொள்வது போல் வனிதா தன்னை பார்த்துக் கொண்டார் என பேசியுள்ளார்.