மீண்டும் இணையும் செல்வராகவன் சந்தானம் கூட்டணி

NTLRG 20161205085041536036
NTLRG 20161205085041536036

நடிகர் சந்தானம், முடங்கிய தன்னுடைய படத்தை திரும்ப ஆரம்பிக்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இவருடைய நடிப்பில் தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ திரைப்படம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

80 சதவீகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில காரணங்களால், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் வருண்மணியன் இந்த படத்தை கைப்பற்றியுள்ளதாகவும், மீதி உள்ள 20 சதவிகித படப்பிடிப்பை தொடங்க முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை மீண்டும் தொடங்கினால் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என சந்தானமும் கூறியுள்ளதாக தெரிகிறது.

எனவே விரைவில் இந்த படத்தின் 20 சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துபடத்தினை வெளியிடுவதற்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

எனவே செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘மன்னவன் வந்தானடி’ படம் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.