தனிமையை நான் நேசிக்கிறேன்-ராஷ்மிகா

39 Rashmika Mandanna New Latest HD Photos Chalo Movie Heroine Rashmika Mandanna Photo Shoot Images
39 Rashmika Mandanna New Latest HD Photos Chalo Movie Heroine Rashmika Mandanna Photo Shoot Images

நடிகை ராஷ்மிகா மந்தனா இப்போது உள்ள இளைஞர்களின் ஆசை நாயகி. கன்னட சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் தெலுங்கிலும் கலக்கி வந்தார்.

அங்கு இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் புகழ்பெற்றது, தமிழ் சினிமா ரசிகர்களும் அப்படங்களை கொண்டாடினார்கள்.

சினிமாவில் அவர் பெயர் ஓங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கை குறித்து சர்ச்சை எழும்பியது, அதாவது அவரது நிச்சயதார்த்தம் முடிவுக்கு வந்தது.

கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகா யாரையோ காதலிக்கிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில், ஆம் நான் காதலிக்கிறேன், தனிமையை தான் நான் நேசிக்கிறேன்.

தனிமையில் இருப்பதை பற்றி நான் பேசுகிறேன். என்னை நம்புங்கள், நீங்கள் தனிமையில் இருப்பதை ரசிக்கும் போது உங்கள் காதலருக்கான உங்கள் தர நிலைகள் உயரும் என பதிவு செய்துள்ளார்.