விஜயுடன் பணிபுரியும் வாய்ப்பை தவறவிட்ட முன்னணி இயக்குனர்!

vijay sarkar 1
vijay sarkar 1

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஆவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர். ஊரடங்கு முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், இவர் தளபதி விஜய்யை வைத்து மின்சார கண்ணா என்ற படத்தை இயக்கியிருந்தார்.

மேலும் அதன்பின் தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரிய இரண்டு முறை வாய்ப்புகள் வந்ததாகவும், அதில் ஒரு முறை ரஜினியின் ராணா திரைப்படத்திற்காக தவறவிட்டதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.