ஆரோக்கியத்திற்காக தினமும் கோமியம் குடிக்கிறேன்- அக்‌ஷய் குமார்

akshaykumar 1575700946
akshaykumar 1575700946

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தினமும் ஆரோக்கிய காரணங்களுக்காக கோமியம் குடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு யானை சாணத்தில் தேநீர் செய்து கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி யானை சாணத்தில் போட்ட தேநீரை எப்படி குடித்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அக்ஷய் குமார் தான் ஆயுர்வேத காரணங்களுக்காக கோமியத்தை குடிப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் குறித்த பதில் தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.