500 ருபாய் சம்பளம் வாங்கிய நடிகை த்ரிஷா!

fe51d9f5064dc5760db22c8d8ab6dd3c
fe51d9f5064dc5760db22c8d8ab6dd3c

அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த மௌனம் பேசியதே எனும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

மௌனம் பேசியதே படத்தை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், சிம்பு, கமல், தனுஷ், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து 18 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் இவர் இணைந்து நடித்து வெளியான 96 திரைப்படம், நடிகை த்ரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. மேலும் தற்போது ராங்கி, கர்ஜனை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.

இந்நிலையில் இவர் முதன் முதலில் தமிழ் திரையுலகில் ஒரு துணை நடிகையாக தன் திரைப்பயணத்தை துவங்கினார். ஜோடி எனும் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்த த்ரிஷா, அப்படத்திற்காக வெறும் 500 ருபாய் தான் சம்பளமாக வாங்கினாராம்.

மேலும் தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் மட்டுமே ரூ. 1.5 கோடி என கூறப்படுகிறது.