விஜய்யை அழ வைத்த நடிகை சரண்யா மோகன்!

vikatan 2020 09 2f439106 9982 4ea3 9bb8 2618447fef73 10599
vikatan 2020 09 2f439106 9982 4ea3 9bb8 2618447fef73 10599

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் தனது 65வது படத்தை நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய்யை பற்றி நமக்கு தெரியாத சில விடயங்களை அவருடன் நடித்த பிரபலங்கள் நேர்காணல் மூலம் கூறுவார்கள்.

அந்த வகையில் தற்போது வேலாயுதம் படத்தில் விஜயுடன் இணைந்து அவருக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை சரண்யா மோகன் விஜய்யை பற்றி சில விடயங்களை பகிர்ந்திருக்கிறார்.

அதில் ஒன்றாக, வேலாயுதம் படத்தில் நடிகை சரண்யா மோகன் இறந்து போன பிறகு விஜய் அழுகிற காட்சி இருக்கும். இதில் விஜய் நியமாகவே அழுதிருக்கிறார்.

ஏனென்றால், நடிகர் விஜய்யின் சொந்த தங்கச்சி, வித்யா 2 வயதில் உடல்நிலை குறைவால் இறந்துவிட்டதால், வித்யாவின் ஞாபகம், இந்த காட்சியில் வந்ததால் கவலைப்பட்டாராம் விஜய் என கூறியுள்ளார்.