மாணவர்களின் மரணங்களை இனி வேடிக்கை பார்க்க முடியாது-சூர்யா

9497ac6cef6bd82c0a426f3a086091f1
9497ac6cef6bd82c0a426f3a086091f1

மாணவர்களின் மரணங்களை இனி வேடிக்கை பார்க்க முடியாது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தொடர்பாக அறிக்கையொன்றை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் நடிகர் சூர்யா மேலும் கூறியுள்ளதாவது, “இது சாதாரண குடும்பத்து குழந்தைகளின் மருத்துவர் கனவில், தீ வைக்கும் தேர்வு.

அநீதியான தேர்வு முறையால் அப்பாவி மாணவர்களின் மரணங்களை இனியும் நாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஆகவே, நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து, குரல் கொடுக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.