அங்காடித் தெருதிரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
கொரோனா காலகட்டத்தில் சக கலைஞர்களுக்கு உதவிகள் செய்தும் வந்தார். இந்நிலையில் சிந்துவுக்கு புற்றுநோய் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிளாக் பாண்டி வெளியிட்டுள்ள வீடியோவில் அவரும் சிகிச்சையில் இருக்கும் சிந்துவும் பேசி இருக்கிறார்கள்.
மருத்துவ உதவிக்காக சிரமப்படும் நிலையில் இருக்கும் அவர் பொருளாதார உதவி கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.