அட்லியின் படத்தில் நடிக்கப்போகும் ஷாருக்கான்!

f51c7d10 b97651c6 atlee 850 850x460 acf cropped
f51c7d10 b97651c6 atlee 850 850x460 acf cropped

இயக்குனர் அட்லியின் படத்தில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள அட்லி, அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ளது.

இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2 ஆம் திகதி வெளியாககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.