விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

bs5lo9h vijayakanth 625x300 01 September 18
bs5lo9h vijayakanth 625x300 01 September 18


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும்,நடிகருமான விஜயகாந்துக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 வயதான விஜயகாந்த், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், விஜயகாந்திற்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரிவிக்கவிப்படவில்லை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன