பாடும் நிலா பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்!

spb06 1597938981
spb06 1597938981

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் கூறியிருந்தார்.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.