எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்!

b97dc0ca4d9ceefe7ba961dd57d44ae0
b97dc0ca4d9ceefe7ba961dd57d44ae0

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க பங்கேற்றிருந்தனர்.

உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா காரணமாக உடல்நல குறைவால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உயிர் இழந்தார் என்பது குறிப்பித்ததக்கது.