பிக்போஸ் புகழ் லொஸ்லியாவின் முதல் விளம்பரம்!

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்போஸ் நிகழ்சி மூலம் பிரபல்யமான லொஸ்லியா தற்போது நடிகையாக அவதாரம் எடுத்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கொரோனா பிரச்சினைகள் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். ராட்சசன், ஓ மை கடவுளே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த Axcess Film Factory தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ஹீரோவாக பூர்னேஷ் அறிமுகமாகவுள்ளார்.

இந்த நிலையில், லொஸ்லியா தற்போது விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். முதன் முதலாக அவர் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.