‘தி பேட்மேன்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைப்பு

57968
57968

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட அனைத்து பணிகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது தெரிந்ததே. குறிப்பாக திரைப்படங்கள் வெளியாகுவது பல மாதங்களுக்கும், ஒரு சில திரைப்படங்கள் வருடக்கணக்கிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தை அடுத்து தி பேட் மேன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராபர்ட்சன் நடித்த ‘தி பேட்மேன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஹாலிவுட் திரைப்படம் முதல் கோலிவுட் திரைப்படங்கள் வரை கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல மாதங்களுக்கு ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.