விஜயகாந் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி- அதிர்ச்சியில் திரையுலகம்

bs5lo9h vijayakanth 625x300 01 September 18
bs5lo9h vijayakanth 625x300 01 September 18

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் திகதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு அவருடைய மனைவி பிரேமலதாவும் கொரோனா தொற்று பாதிப்பால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவருமே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அக்டோபர் 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

தேமுதிக சார்பில் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான பரிசோதனைதான். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்கள்.

இதையடுத்து, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், வழக்கமான பரிசோதனைக்காக அப்பா மருத்துவமனை சென்றுள்ளார். தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.