விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகின்றது தளபதி 65 திரைப்படம்!

999
999

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள தளபதி 65 படம் குறித்த முக்கிய பதிவு வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. கொரோனா பிரச்சனை முடிவடைந்ததும் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ‘தளபதி 65’ என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். 

இப்படம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.  படத்தின் அறிவிப்பு தாமதமானாலும், படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அதாவது தளபதி 65 படம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

தற்போது விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு தொடங்கியுள்ளதாம். படப்பிடிப்புக்கு செல்லும் போது படம் குறித்து அறிவிக்கலாம் என தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.