முடிவிற்கு வருகிறது பிரபல சீரியல் !

5 3
5 3

பிரபல தொலைக்காட்சியான கலர்ஸில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் திருமணம். இதில் நாயகன்-நாயகியாக நடிக்குத் சித்து-ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

சீரியலை போலவே இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஒன்றாக இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறி வருகிறார்கள். அண்மையில் தான் இந்த சீரியல் தொடங்க 2 வருடம் ஆகிவிட்டது என கொண்டாடினார்கள்.

இந்த சீரியல் கடந்த அக்டோபர் 8, 2018ம் தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது சீரியல் வரும் அக்டோபர் 16ம் தேதி வெள்ளிக்கிழமை முடிவுக்கு வர இருக்கிறதாம். அன்று சீரியலின் கிளைமேக்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. இந்த செய்தி திருமணம் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.