பிரபல இயக்குனரின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு!

panneer121020 4
panneer121020 4

விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பன்னீர்செல்வம் ஏற்கனவே ’ரேணிகுண்டா’ என்ற வெற்றி படத்தை இயக்கி உள்ளார்

panneer121020 3
panneer121020 3

இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குநர் பன்னீர் செல்வத்தின் அடுத்த படத்தின் டைட்டில் ’ஐஸ்வர்யா முருகன்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை மாஸ்டர்பீஸ் புரடொக்சன்ஸ் மற்றும் ராக்போர்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்று வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில் தொழில்நுட்ப கலைஞர்களின் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா என்பவர் இசையமைக்கிறார். அர்ஜுன் ஜனா என்பவரின் ஒளிப்பதிவில் ஜான் ஆபிரகாம் என்பவரின் படத்தொகுப்பில் முகமது என்பவரின் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது