இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்-நயன்தாரா

Nayantara
Nayantara

தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட 68 படங்கள் நடித்துவிட்டார் நடிகை நயன்தாரா.

மேலும் கடந்த 18 வருடங்களாக முன்னணி நடிகைகளில் முதன்மையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் எனும் படம் ரசிகர்களால் ரசிக்கப்படாமல் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை குறித்து வெட்கப்படுகிறேன் என்றும் அதற்கு காரணம் அப்படத்தின் கதையை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் என்று நயன்தாரா தெரிவித்துள்ளாராம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.