மீண்டும் இணைகிறது அனிருத் -தனுஷ் கூட்டணி!

44444
44444

தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி ,மாரி,தங்கமகன் ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல், நானும் ரவுடிதான் ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார்.

இடையில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த  படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு வேறு இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்தனர். தனுஷுக்கும், அனிருத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே தனுஷ் வேறொரு இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. குட்டி, உத்தம புத்திரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க  உள்ளார். அந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.