அழுத்தத்திற்கு மத்தியில் விலகும் விஜய் சேதுபதி!

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் “800” என்ற திரைப்படம் எடுக்கப்பட உள்ள நிலையில் இதில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பல அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந் நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் இப்படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. இவ் முடிவை இன்று அல்லது நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் தெரிய வருகின்றது. மேலும் இப்படத்திற்கு பதிலாக வேறு திரைக்கதையை கொண்ட படத்தில் நடித்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.